/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி நான்கு பேர் படுகாயம்
/
கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி நான்கு பேர் படுகாயம்
கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி நான்கு பேர் படுகாயம்
கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி நான்கு பேர் படுகாயம்
ADDED : செப் 06, 2024 01:26 AM
திருச்சி:திருவாரூர் பகுதியில் இருந்து பருத்தி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு, தேனி மாவட்டத்துக்கு, லாரி ஒன்று சென்றது.
திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில், திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு, 8:00 மணியளவில், வந்த போது, கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் இருந்த பேரிக்கார்டுகள் மீதும், ஏழு டூ -- வீலர்கள் மீதும் மோதியது.
இதில், திருவெறும்பூர் அருகே உள்ள பிரகாஷ் நகரை சேர்ந்த முத்துக்குமார், 52, காட்டூர் பகுதியை சேர்ந்த சுமன், 26, பத்மநாபன், 50, ஹேமாம்பிகா, 47, ஆகியோர் படுகாயம்அடைந்தனர்.
திருச்சியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர். இதனால், அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.