/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
வயலில் சாய்ந்த மின் கம்பங்கள்: மகசூல் பாதிக்கும் அபாயம்
/
வயலில் சாய்ந்த மின் கம்பங்கள்: மகசூல் பாதிக்கும் அபாயம்
வயலில் சாய்ந்த மின் கம்பங்கள்: மகசூல் பாதிக்கும் அபாயம்
வயலில் சாய்ந்த மின் கம்பங்கள்: மகசூல் பாதிக்கும் அபாயம்
ADDED : ஜூன் 13, 2024 05:30 PM

திருச்சி:திருச்சியில் கடந்த 15 நாட்களுக்கு முன், பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. அதனால், புங்கனுார், தாயனுார், கிராமத்தில் 15க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் வயலில் சாய்ந்தன.
மின் கம்பங்கள் சாய்ந்ததால், மின்கம்பிகள் அறுந்து விட்டதால், 15 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், பம்ப் செட்டுகளை இயக்கி தண்ணீர் பாய்ச்சாததால், 350க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள், காய்ந்து மகசூல் பாதிக்கும் சூழல் உருவாகி உள்ளது.
மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் கண்டுகொள்ளாமல் இருப்பதாக, விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். மின் உபகரணங்கள் இல்லை என்று கூறும் மின் வாரியத்தினர், வீடுகளுக்கான மின் இணைப்பை சரி செய்து தருமாறு கூறுபவர்களிடம், மின் கம்பங்களை மாற்றுவதற்கு, பணம் கேட்பதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே, மின் வாரியத்தினர் துரிதமாக செயல்பட்டு, விவசாய பயிர்களை அழிவில் இருந்து பாதுகாக்க வேண்டும், என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்.