/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
திருச்சி டூ அபுதாபிக்கு இண்டிகோவும் விமான சேவை
/
திருச்சி டூ அபுதாபிக்கு இண்டிகோவும் விமான சேவை
ADDED : ஆக 11, 2024 11:18 PM

திருச்சி : திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர், ஷார்ஜா, அபுதாபி போன்ற நாடுகளுக்கு நேரடி விமான சேவை வழங்கப்படுகிறது.
கடந்த 2022 மார்ச் முதல், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், வாரத்தில் மூன்று நாட்கள், திருச்சி -- அபுதாபி மார்க்கத்தில் விமானங்களை இயக்கி வருகிறது.
இந்நிலையில், இண்டிகோ நிறுவனம், வாரத்தில் நான்கு நாட்கள் விமானங்களை இயக்கும் வகையில், அபுதாபி, திருச்சி மார்க்கத்தில் விமான சேவையை துவக்கி உள்ளது.
இந்நிறுவனத்தின் சார்பில், அபுதாபியில் இருந்து திருச்சிக்கு 173 பயணியருடன் இயக்கப்பட்ட முதல் விமானம், நேற்று காலை 6:30 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தது. அந்த விமானத்திற்கு வாட்டர் சல்யூட் அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.