sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

மஹாசிவராத்திரியை முன்னிட்டு திருச்சியில் ஆதியோகி ரத யாத்திரை!

/

மஹாசிவராத்திரியை முன்னிட்டு திருச்சியில் ஆதியோகி ரத யாத்திரை!

மஹாசிவராத்திரியை முன்னிட்டு திருச்சியில் ஆதியோகி ரத யாத்திரை!

மஹாசிவராத்திரியை முன்னிட்டு திருச்சியில் ஆதியோகி ரத யாத்திரை!


ADDED : ஜன 24, 2025 08:00 AM

Google News

ADDED : ஜன 24, 2025 08:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தென் கைலாய பக்தி பேரவை சார்பில் நடத்தப்படும் ஆதியோகி ரத யாத்திரை திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வரும் ஜனவரி 22 முதல் 24 ஆம் தேதி வரை நடைபெறகிறது. அதே போல் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களிலிருந்து 6 ஆதியோகி தேர்களுடன் கோவை வெள்ளியங்கிரியை நோக்கி நூற்றுக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக வரவுள்ளனர்.

இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று (23/01/2025) திருச்சி பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. இதில் தென்கைலாய பக்தி பேரவையின் தன்னார்வலர்கள் பங்கேற்று பேசினர்.

தென்கைலாய பக்தி பேரவையின் தன்னார்வலர் ராஜ்பிரகாஷ் அவர்கள் பேசுகையில் “ஈஷாவில் 31-வது மஹாசிவராத்திரி விழா வரும் பிப்ரவரி 26-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதில் பங்கேற்க பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாகவும், கோவைக்கு வந்து ஆதியோகியை நேரில் தரிசிக்க முடியாதவர்கள் அவர்களுடைய ஊர்களிலேயே தரிசனம் செய்வதற்காகவும் இந்த ரத யாத்திரை ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

அந்த வகையில், 2025-ஆம் ஆண்டிற்கான ஆதியோகி ரத யாத்திரை கோவை ஆதியோகி முன்பு துவக்கி வைக்கப்பட்டது. இதில் கிழக்கு மற்றும் தெற்கு திசை நோக்கி செல்லும் ரத யாத்திரையை டிசம்பர் 11-ஆம் தேதி தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தார்.

அதேபோல் வடக்கு மற்றும் மேற்கு திசைகளில் பயணிக்க உள்ள ஆதியோகி ரத யாத்திரையை டிசம்பர் 22-ஆம் தேதி தவத்திரு பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளாரும், தவத்திரு சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகளும் தொடங்கி வைத்தனர். இந்த ரத யாத்திரைக்காக 6 அடி உயர ஆதியோகி திருவுருவ சிலையுடன் கூடிய 4 வாகனங்கள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.

திருச்சி மாவட்டத்தைப் பொறுத்த வரையில் ஆதியோகி ரதம் இம்மாதம் 22 முதல் 24-ஆம் தேதி வரை வலம் வருகிறது. அதன்படி 22-ஆம் தேதி மலைக்கோவில், LIC அலுவலகம், எறும்பீஸ்வரர் கோவில்,இந்திரா நகர், திருவறும்பூர் மற்றும் BHEL பகுதிகளில் வலம் வந்தது. இதனைத் தொடர்ந்து 23 மற்றும் 24-ஆம் தேதிகளில் திருச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளான சமயபுரம் கோவில், திருவானைக்காவல், மேலூர், ராமகிருஷ்ணா தபோவனம், வயலூர், சோமரசன்பேட்டை உள்ளிட்ட இடங்களில் வலம் வர உள்ளது.

இதனைத் தொடர்ந்து அரியலூர், பெரம்பலூர், முசுறி, குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் ஆதியோகி ரதம் வலம் வர உள்ளது. முன்னதாக கடந்த 16 முதல் 21-ஆம் தேதி வரையில் மன்னார்குடி, பேராவூரணி, அறந்தாங்கி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஆதியோகி ரதம் வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த ரதங்கள் செல்லும் இடங்களில் அங்குள்ள முக்கிய பிரமுகர்கள், சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் பலர் சிறப்பான வரவேற்பினை வழங்க உள்ளனர். ஆதியோகிக்கு விருப்பம் உள்ள மக்கள் தீபாராதனை, மலர்கள், பழங்கள், நைவேத்தியங்களை அர்பணிக்கலாம்.

இதனுடன் 'சிவ யாத்திரை' எனும் பாத யாத்திரையையும் சிவாங்கா பக்தர்கள் ஆண்டுதோறும் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மைசூரு, சென்னை, நாகர்கோவில், கோவை, பொள்ளாச்சி மற்றும் பட்டுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் இருந்து ஆதியோகி சிவன் திருவுருவம் தாங்கிய 6 மரத்திலான தேர்களை இழுத்தபடி பக்தர்கள் பாத யாத்திரையாக வருகின்றனர்.

சென்னையிலிருந்து ஆதியோகி தேருடன் 63 நாயன்மார்களின் திருவுருவச் சிலைகளோடு கூடிய மற்றொரு தேரும் கோவை நோக்கி பயணிக்க உள்ளது. அதே போல மற்ற 5 திருத்தேர்களிலும் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் ஆகிய நால்வரின் திருவுருவச் சிலைகளும் இடம் பெற்று உள்ளன.

மேலும் கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரி விழா அதே நேரத்தில் தமிழகத்தில் மொத்தம் 50 இடங்களில் நேரலை செய்யப்பட உள்ளது. திருச்சி மாவட்டத்தை பொறுத்த வரையில் வயலூர் முருகன் கோவில் அருகேயுள்ள ராயல் மண்டபத்திலும், BHEL-லில் கைலாஷ் நகர் வி.எம். மஹாலிலும் அதே போல் முசுறியில் தா.பேட்டை ரோடு லக்ஷ்மி மஹாலிலும் நேரலை செய்யப்பட உள்ளது.

இவ்விடங்களிலும் பக்தர்கள் திரளாக பங்கேற்க இருக்கிறார்கள். அங்கு அவர்களுக்கு இலவச ருத்ராட்சம், சத்குருவின் ஆனந்த அலை புக்லெட் மற்றும் மஹா அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

அதுமட்டுமின்றி, கோவைக்கு வர விரும்பும் வெளி மாவட்ட மக்களுக்கு போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆதியோகி ரதங்கள் மஹாசிவராத்திரி வரையிலான 2 மாத காலத்தில் 1,000-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக சுமார் 30,000 கி.மீ பயணிக்க உள்ளன. மேலும் ரதங்கள் திட்டமிட்ட படி அனைத்து பகுதிகளையும் வலம் வந்த பின்னர் இறுதியாக பிப்ரவரி 26-ஆம் தேதி, மஹாசிவராத்திரி நாளன்று கோவை ஈஷா யோக மையத்தை வந்தடையும்.” என அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us