/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
புளியஞ்சோலையில் கரடி சுற்றுலா பயணியருக்கு தடை
/
புளியஞ்சோலையில் கரடி சுற்றுலா பயணியருக்கு தடை
ADDED : ஆக 11, 2025 02:24 AM
துறையூர:றையூர் அருகே, புளியஞ்சோலை வனப்பகுதியில் கரடி நடமாட்டம் இருப்பதால் சுற்றுலா பயணியருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை பகுதியில் உருவாகும் நீரூற்றினால், திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள புளியஞ்சோலை வனப்பகுதியில் உள்ள ஓடையிலும், சிறு அருவிகளிலும் எப்போதும் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கும். இதனால், ஏராளமான சுற்றுலா பயணியர், அருவி மற்றும் ஓடைகளில் குளிக்க வந்து செல்கின்றனர்.
நேற்று முன்தினம், புளியஞ்சோலை ஓடை பகுதியில், கரடி ஒன்று சுற்றித்திரிந்ததை சுற்றுலா பயணியர் பார்த்துள்ளனர். தகவலறிந்து, அங்கு சென்ற வனத்துறையினர், கரடி நடமாட்டத்தை உறுதி செய்தனர்.
அதனால், 'மறு அறிவிப்பு வரும் வரை, புளியஞ்சோலை சுற்றுலா தலம் தற்காலிகமாக மூடப்படுகிறது. சுற்றுலா பயணியர் யாரும் வர வேண்டாம்' என, வனத்துறையினர் அறிவித்துள்ளனர். கரடி நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.