/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
புற்றுநோய் ஆராய்ச்சி மாணவிக்கு முதல்வர் ரூ.17.50 லட்சம் நிதி
/
புற்றுநோய் ஆராய்ச்சி மாணவிக்கு முதல்வர் ரூ.17.50 லட்சம் நிதி
புற்றுநோய் ஆராய்ச்சி மாணவிக்கு முதல்வர் ரூ.17.50 லட்சம் நிதி
புற்றுநோய் ஆராய்ச்சி மாணவிக்கு முதல்வர் ரூ.17.50 லட்சம் நிதி
ADDED : ஆக 10, 2025 01:37 AM

திருச்சி:திருச்சி, ஈ.வெ.ரா., அரசு கலைக்கல்லுாரியில், புற் றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள மாணவிக்கு, முதல்வரின் ஆராய்ச்சி மானியத்திட்டத்தில், 17.50 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது.
திருச்சியில் உள்ள ஈ.வெ.ரா. அரசு கலைக்கல்லுாரியில், உயிரி வேதியியல் துறையில், ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் பாக்கியலட்சுமி என்ற மாணவி, மூலிகை தாவரங்களில் இருந்து, புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.
அவர், 'மார்பகம் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் செல் வரிசைகளில் சீசல்பினியா பாண்டுசெல்லா சாற்றின் புற்றுநோய் எதிர்ப்பு திறனை ஆராய்தல்' என்ற ஆராய்ச்சி தொடர்பான அறிக்கையை, தமிழக அரசுக்கு அனுப்பி இருந்தார்.
அவரது அறிக்கையை ஆய்வு செய்த சென்னை, தொழில்நுட்ப கல்வி இயக்கக ஆணையர் இன்னசென்ட் திவ்யா, 2024 - 25க்கான, முதல்வரின் ஆராய்ச்சி மானிய திட்டத்தில், நிதி உதவி வழங்க பரிந்துரை செய்தார்.
பாக்கியலட்சுமியின், மூன்று ஆண்டு ஆராய்ச்சிக்கு, தமிழக அரசு, 17 லட்சத்து 58,750 ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது. நிதி உதவி அளித்த முதல்வர் ஸ்டாலின், ஆராய்ச்சி படிப்புக்கு உறுதுணையாக இருக்கும் கல்லுாரி முதல்வர், உதவி பேராசிரியர் அய்யாவு ஆகியோருக்கு, பாக்கியலட்சுமி நன்றி தெரிவித் துள்ளார்.