/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
பிஷப் ஹீபர் கல்லுாரி மாணவர் துாக்கிட்டு தற்கொலை
/
பிஷப் ஹீபர் கல்லுாரி மாணவர் துாக்கிட்டு தற்கொலை
ADDED : ஜூலை 09, 2025 11:15 PM
திருச்சி: அரியலுார் மாவட்டம், திருமானுாரைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் அபிஷேக், 19. இவர், திருச்சி பிஷப்ஹீபர் கல்லுாரியில், விடுதியில் தங்கி இரண்டாம் ஆண்டு பி.ஏ., படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம், அபிஷேக் தந்தைக்கு கல்லுாரியில் இருந்து தகவல் வந்தது. அதில், 'உங்கள் மகன் தவறு செய்து விட்டார். கல்லுாரி விடுதிக்கு வரவும்' என்று மட்டும் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, நேற்று முன்தினம் காலை, கல்லுாரிக்கு வந்த வெங்கடேசன், மாலை வரை காத்திருந்தும் மகனை பார்க்க முடியவில்லை. பின், அவர் கல்லுாரி விடுதியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.  அவரது தந்தை, உறையூர் போலீசில் புகார் அளித்தார்.
நேற்று காலை, மாணவர் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திருச்சி அரசு மருத்துவமனை முன், உறவினர்கள் மறியல் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் போலீசார் பேச்சு நடத்தி, மறியலை கைவிட வைத்தனர்.

