/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
ரூ.2.20 லட்சம் வாங்கி ஏமாற்றிய பா.ஜ., மகளிரணி தலைவர் கைது
/
ரூ.2.20 லட்சம் வாங்கி ஏமாற்றிய பா.ஜ., மகளிரணி தலைவர் கைது
ரூ.2.20 லட்சம் வாங்கி ஏமாற்றிய பா.ஜ., மகளிரணி தலைவர் கைது
ரூ.2.20 லட்சம் வாங்கி ஏமாற்றிய பா.ஜ., மகளிரணி தலைவர் கைது
ADDED : மார் 04, 2024 01:29 AM
திருச்சி: திருச்சி மாவட்டம், திருவெறும்பூரைச் சேர்ந்தவர் ரேகா, 39, திருச்சி மாவட்ட பா.ஜ., மகளிரணி தலைவராக உள்ளார். திருவெறும்பூர் பகுதியில், டைல்ஸ் கடையும் நடத்தி வருகிறார்.
திருவெறும்பூரைச் சேர்ந்த கட்டட கான்ட்ராக்டர் கண்ணன், 50, டைல்ஸ் வாங்குவதற்காக, ரேகாவை அணுகியபோது, குறைந்த விலையில் வாங்கித் தருவதாக கூறி, 2.20 லட்சம் ரூபாயை, ரேகா வாங்கினார். ஆனால், கூறியபடி டைல்ஸ் வாங்கித் தரவில்லை.
இதுகுறித்து கண்ணன் கேட்டபோது, பணம் தர முடியாது என்று கூறி, மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த கண்ணன், திருச்சி எஸ்.பி., வருண்குமாரிடம் புகார் அளித்தார்.
புகாரை விசாரிக்க, திருவெறும்பூர் போலீசாருக்கு எஸ்.பி., அறிவுறுத்தினர். விசாரணை நடத்தப்பட்டு, பணமோசடியில் ஈடுபட்ட ரேகா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நேற்று முன்தினம் இரவில் கைது செய்யப்பட்டார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், மாஜிஸ்திரேட் உத்தரவின்படி, திருச்சி மகளிர் சிறையில் அடைத்தனர்.

