/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
டூ - வீலர் மீது கார் மோதல்; இருவர் மரணம்
/
டூ - வீலர் மீது கார் மோதல்; இருவர் மரணம்
ADDED : டிச 30, 2024 11:32 PM
திருச்சி; திருச்சி மாவட்டம், சிறுகனுார் அருகே ரெட்டிமாங்குடி கிராமத்தைச் சேர்ந்த கல்யாணசுந்தரம், 47, வாசுதேவன், 47, ஆகியோர், ரெட்டிமாங்குடியில் இருந்து பாடாலுாருக்கு பைக்கில் நேற்று சென்றனர்.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சணமங்கலம் பிரிவு சாலை அருகே வந்த போது, அவ்வழியாக அதிவேகத்தில் சென்னை நோக்கி சென்ற கார், டூ - வீலர் மீது மோதியது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் பாய்ந்தது.
இதில், தலையில் பலத்த காயம் அடைந்த கல்யாணசுந்தரம் சம்பவ இடத்திலேயே இறந்தார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வாசுதேவன், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
காரை ஓட்டி வந்த கேரளாவைச் சேர்ந்த ஜெபின்ராஜ் மற்றும் அவரது மனைவி, இரண்டு குழந்தைகளும் படுகாயம் அடைந்தனர்.
சிறுகனுார் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு, இருங்களூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்து குறித்து, சிறுகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.