ADDED : செப் 02, 2026 06:34 AM
அ நிறம் | அளவு
திருச்சி: திருச்சி, பொன்மலைப்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், கடலுார் மாவட்டத்தை சேர்ந்த மாணவி, விடுதியில் தங்கி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு, நேற்று முன்தினம் மதியம் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
அவரை பள்ளி அறையை விட்டு வெளியே அழைத்து வந்தபோது, பள்ளி வளாகத்திலேயே ஆண் குழந்தை பிறந்துள்ளது. மாணவி கர்ப்பத்துக்கு காரணமான, கடலுாரை சேர்ந்த அவரது உறவினர் மீது பொன்மலை மகளிர் போலீசார், போக்சோ வழக்கு பதிவு செய்தனர்.
