/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
'லாக் - அப் டெத்' கூடாது டி.ஜி.பி., அதிரடி உத்தரவு
/
'லாக் - அப் டெத்' கூடாது டி.ஜி.பி., அதிரடி உத்தரவு
'லாக் - அப் டெத்' கூடாது டி.ஜி.பி., அதிரடி உத்தரவு
'லாக் - அப் டெத்' கூடாது டி.ஜி.பி., அதிரடி உத்தரவு
ADDED : டிச 04, 2024 12:43 AM
திருச்சி:தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வரும், 9ம் தேதி துவங்கும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். சட்டசபை துவங்கவுள்ள நேரத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நடந்தால், எதிர்க்கட்சியினர் கேள்வி மேல் கேள்வி எழுப்பி, சபையில் ஆளுங்கட்சியை தர்மசங்கடத்தில் ஆழ்த்தி விடுவர்.
இதனால், தமிழக சட்டசபை கூட்டத்தொடர் துவங்குவதை ஒட்டி, தமிழக சிறைத்துறை டி.ஜி.பி., அமரேஷ் புஜாரி, தமிழகத்தில் உள்ள மத்திய சிறைத்துறை டி.ஐ.ஜி.,க்கள், சிறை கண்காணிப்பாளர்கள், பெண்கள் சிறப்பு சிறை அலுவலர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
சிறைகளில் இருந்து கைதிகள் தப்பியோடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சிறைவாசிகள் தற்கொலை, லாக் - அப் டெத் போன்ற எவ்வித அசம்பாவிதங்களும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
எந்த பிரச்னையும் சிறையில் இருந்தோ, சிறைத்துறையினரிடம் இருந்தோ வரக்கூடாது. சிறைகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். எவ்வித கிளர்ச்சிகரமான சம்பவங்களும் சிறைகளில் எழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும் நாட்களில், அதிகாரிகள் விடுமுறையில் செல்வதை தவிர்க்க வேண்டும். விடுமுறை நாட்களில்கூட பணியில் இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.