/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
திருச்சியில் தீ விபத்து கார், பைக்குகள் சேதம்
/
திருச்சியில் தீ விபத்து கார், பைக்குகள் சேதம்
ADDED : செப் 11, 2025 03:48 AM
திருச்சி,:திருச்சி கே.கே.நகர் பகுதி கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று கார்கள், நான்கு பைக்குகள் எரிந்து சேதமடைந்தன.
திருச்சி கே.கே.நகர் இந்தியன் வங்கி காலனியில் கார் மெக்கானிக் பட்டறை வைத்திருப்பவர் சங்கர். நேற்று நள்ளிரவு இவரது மெக்கானிக் பட்டறை உட்பட, அருகில் இருந்த, 5 கடைகளில் தீப்பற்றியது.
இதில், மெக்கானிக் பட்டறையில் இருந்த இரு கார்கள், அருகில், ஸ்டிக்கர் கடையில் நின்றிருந்த ஒரு கார் மற்றும் அருகில் இருந்த கடைகளில் நிறுத்தப்பட்டிருந்த, நான்கு டூ - வீலர்கள் மற்றும் சைக்கிள் தீ விபத்தில் சேதமடைந்தன.
இதையடுத்து, திருச்சி கண்டோன்மென்ட் தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைத்தன. தீ விபத்து குறித்து கே.கே.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.