ADDED : செப் 08, 2025 03:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி:வீட்டின் சுவர் விழுந்ததில், 11 வயது சிறுமி உயிரிழந்தார்.
திருச்சி, இ.பி.ரோடு பகுதியில் உள்ள சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் சிவா. இவரது மனைவி கொளஞ்சி, 42. மகள் கார்த்திகா, 11. இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில், 7ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று காலை கார்த்திகா, தன் தாய் கொளஞ்சியுடன், தன் வீட்டுக்கு செல்ல, அப்பகுதியில் உள்ள சந்து வழியாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது, நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் ஊறிப்போயிருந்த சேகர் என்பவரின் வீட்டின் சுவர் இடிந்து, கார்த்திகா மற்றும் அவரின் தாய் மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த கார்த்திகா, அங்கேயே உயிரிழந்தார்.
இதில் படுகாயமடைந்த கொளஞ்சி, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.