/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
திருச்சி கோவில்களில் கவர்னர் சுவாமி தரிசனம்
/
திருச்சி கோவில்களில் கவர்னர் சுவாமி தரிசனம்
ADDED : மே 30, 2025 07:35 AM

திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவிலில், தமிழக கவர்னர் ரவி, குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார்.
தமிழக கவர்னர் ரவி, தன் குடும்பத்தினருடன் இரண்டு நாள் பயணமாக, சென்னையில் இருந்து விமானத்தில் திருச்சி வந்தார். நேற்று திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்ற அவருக்கு, பட்டச்சாரியார்கள் மற்றும் அர்ச்சகர்கள் தங்கக் குடத்தில் பூரண கும்ப மரியாதை வழங்கி, வரவேற்றனர்.
ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், கோவில் இணை ஆணையர் சிவராம் குமார் தலைமையில், கோவில் பணியாளர்கள் சால்வை மற்றும் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, கவர்னரின் குடும்பத்தினர், கோவில் யானை ஆண்டாளுக்கு பழங்களை வழங்கி மகிழ்ந்தனர். கோவிலில் இருக்கும் கருடாழ்வார் சன்னதி, மூலவர் பெரிய பெருமாள் சன்னதி, தாயார் சன்னதிகளுக்கு சென்று கவர்னரும், அவரது குடும்பத்தினரும் சுவாமி தரிசனம் செய்தனர். அதன் பின், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இரவு, திருச்சியில் ஓய்வெடுக்கும் கவர்னர், இன்று முசிறி அருகே உள்ள குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனம் செய்கிறார். அங்கு நடைபெறும் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின், அங்கிருந்து மதுரை செல்ல உள்ளார்.