/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
கள்ளக்காதல் வேண்டாம் என்ற டிரைவரை கொன்றவருக்கு 'ஆயுள்'
/
கள்ளக்காதல் வேண்டாம் என்ற டிரைவரை கொன்றவருக்கு 'ஆயுள்'
கள்ளக்காதல் வேண்டாம் என்ற டிரைவரை கொன்றவருக்கு 'ஆயுள்'
கள்ளக்காதல் வேண்டாம் என்ற டிரைவரை கொன்றவருக்கு 'ஆயுள்'
ADDED : அக் 31, 2025 01:01 AM
திருச்சி:  பெண்ணுடன் கள்ளக்காதலை கை விடுமாறு கூறியவரை, கொலை செய்த டிரைவருக்கு, ஆயுள் தண்டனை விதித்து, திருச்சி நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் கக்கன் காலனியை சேர்ந்த வேன் டிரைவர் சதீஷ்குமார், 34. அதே ஸ்டாண்டில் டிரைவராக இருந்த, சுருளிகோவில் தெருவைச் சேர்ந்த முத்துப்பாண்டி, 35, மிக்ஸி பழுது பார்க்கும் கடை வைத்திருந்த பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இதை சதீஷ்குமார் கண்டித்தார். ஆனாலும் முத்துப்பாண்டி கேட்கவில்லை. இதனால் அந்த பெண்ணின் கணவரிடம் கள்ளக்காதல் குறித்து சதீஷ்குமார் கூறினார்.
ஆத்திரமடைந்த முத்துப்பாண்டி, கடந்த, 2022ம் ஆண்டு ஜூன், 30ல், கக்கன் காலனியில் உட்கார்ந்திருந்த சதீஷ்குமாரை கத்தியால் குத்தி கொலை செய்தார். இதுகுறித்து திருவெறும்பூர் போலீசார், முத்துப்பாண்டியை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை, திருச்சி மாவட்ட இரண்டாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்தது; நீதிபதி கோபிநாத் நேற்று தீர்ப்பளித்தார். தீர்ப்பில், சதீஷ்குமாரை கொலை செய்த டிரைவர் முத்துப்பாண்டிக்கு, ஆயுள்தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

