/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
போலீசுக்கு அனுமதியில்லை சமயபுரம் கோவிலில் 'லடாய்'
/
போலீசுக்கு அனுமதியில்லை சமயபுரம் கோவிலில் 'லடாய்'
ADDED : ஏப் 07, 2025 01:27 AM
திருச்சி: பாதுகாப்புக்கு வந்த போலீசாரை கோவில் பணியாளர்கள் அனுமதிக்காததால், போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவில், சித்திரை தேரோட்டம் வரும் 15ம் தேதி நடைபெறுகிறது. நேற்று காலை, சித்திரை தேர் திருவிழாவிற்கான கொடியேற்றம் நடந்தது. பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால், போலீசார் பாதுகாப்பு பணிக்காக அங்கு சென்றனர்.
கோவில் பணியாளர்கள் சிலர், அவர்களை அனுமதிக்காமல் காத்திருக்க வைத்தனர். இதனால் பாதுகாப்புக்கு வந்த போலீசார், கோவில் பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஒரு மணி நேரத்துக்கு பின், போலீசார் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.