/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
போக்சோவில் கைதான ஹெச்.எம்.,க்கு ஆதரவாக நடந்த போராட்டம் நிறைவு
/
போக்சோவில் கைதான ஹெச்.எம்.,க்கு ஆதரவாக நடந்த போராட்டம் நிறைவு
போக்சோவில் கைதான ஹெச்.எம்.,க்கு ஆதரவாக நடந்த போராட்டம் நிறைவு
போக்சோவில் கைதான ஹெச்.எம்.,க்கு ஆதரவாக நடந்த போராட்டம் நிறைவு
ADDED : பிப் 13, 2025 02:44 AM
திருச்சி:போக்சோ வழக்கில் கைதான தலைமை ஆசிரியருக்கு கிராம மக்கள் ஆதரவு தெரிவித்து நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்தது.
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே பழையபாளையத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் நாகராஜன், 52, மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், போக்சோவில் பிப்.,5ம் தேதி இரவு கைது செய்யப்பட்டார்.
நாகராஜன் நல்லவர் என்றும், பொய்யான புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், பழையபாளையம் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி ஆகியவற்றுக்கு, தங்களின் பிள்ளைகளை அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் அரசுத்துறை அதிகாரிகள் பேச்சு நடத்தியும், சமரசம் ஏற்படவில்லை. நேற்று நான்காவது நாளாக மாணவர்களை பள்ளிக்கு அனுப்பவில்லை.
இதையடுத்து நேற்று காலை பள்ளிக்கு மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், ஏ.இ.ஓ., தேவகி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கிராம மக்களுடன் பேச்சு நடத்தினர்.
உடன்பாடு ஏற்பட்டு, மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப ஒப்புக் கொண்டனர். துவக்கப்பள்ளிக்கு, 16 பேரும், நடுநிலைப்பள்ளிக்கு, 30 பேரும் நேற்று வந்தனர்.

