/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
பதிவுத்துறை திருச்சி டி.ஐ.ஜி., பணி ஓய்வு நாளில் 'சஸ்பெண்ட்'
/
பதிவுத்துறை திருச்சி டி.ஐ.ஜி., பணி ஓய்வு நாளில் 'சஸ்பெண்ட்'
பதிவுத்துறை திருச்சி டி.ஐ.ஜி., பணி ஓய்வு நாளில் 'சஸ்பெண்ட்'
பதிவுத்துறை திருச்சி டி.ஐ.ஜி., பணி ஓய்வு நாளில் 'சஸ்பெண்ட்'
ADDED : மே 02, 2025 01:45 AM
திருச்சி:பல்வேறு புகார்களில் சிக்கிய, பதிவுத்துறை திருச்சி டி.ஐ.ஜி., ஓய்வு பெறும் நாளில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
திருச்சி மண்டல பதிவுத்துறை டி.ஐ.ஜி.,யாக இருந்தவர் ராமசாமி, 60. இவர், நேற்று முன்தினம் பணி ஓய்வு பெறுவதாக இருந்தது.
ஆனால், அன்று காலை ராமசாமியை சஸ்பெண்ட் செய்து, பதிவுத்துறை ஐ.ஜி., தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் உத்தரவிட்டார்.
இந்த விவகாரம், பதிவுத்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பதிவுத்துறை அலுவலர்கள் கூறியதாவது:
ராமசாமி, மதுரை, திருப்பூரில் பணியாற்றியபோது, பல நுாறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை, போலி ஆவணங்கள் வாயிலாக பத்திரப்பதிவு செய்ய ஒத்துழைத்து, கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் மீது வழக்கு நிலுவையில் உள்ளது. மதுரையில் தன் உறவினர்கள் பெயரில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை வாங்கியுள்ளார். பல்வேறு புகார்களில் சிக்கியதாலும், அவர் மீதான வழக்கு நிலுவையில் உள்ளதாலும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.