/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
திருச்சி நெடுஞ்சாலை பாலம் 2 மாதத்திற்கு பின் திறப்பு
/
திருச்சி நெடுஞ்சாலை பாலம் 2 மாதத்திற்கு பின் திறப்பு
திருச்சி நெடுஞ்சாலை பாலம் 2 மாதத்திற்கு பின் திறப்பு
திருச்சி நெடுஞ்சாலை பாலம் 2 மாதத்திற்கு பின் திறப்பு
ADDED : மார் 13, 2024 01:05 AM

திருச்சி:திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பொன்மலை ஜி கார்னர் அருகே, சென்னை மார்க்கத்தில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில், ஜன., 11ல் மண் சரிவு ஏற்பட்டு, பழுதானது.
அதனால், அன்று நள்ளிரவு முதல், சென்னை மார்க்கத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, திருச்சி மார்க்கத்தில் உள்ள பாலம் வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.
ஐ.ஐ.டி., பேராசிரியர் அழகுசுந்தரம் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். குழு பரிந்துரைகளின்படி, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில், பாலம் சீரமைப்பு பணி, மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டது. கடந்த வாரம், பாலத்தின் உறுதித் தன்மையும் ஆய்வு செய்யப்பட்டது.
அதன்பின், சோதனை முறையில் கனரக வாகனங்கள் இயக்கி பார்த்த பின், இரண்டு மாதங்களுக்கு பின் நேற்று, சென்னை வழித்தடத்தில் உள்ள பாலம், போக்குவரத்திற்கு மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் நேரு, மகேஷ், மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் மற்றும் அதிகாரிகள் பாலத்தை திறந்து விட்டனர். இதனால், திருச்சி - சென்னை சாலையில், பொன்மலை ஜி கார்னர் முதல் பால்பண்ணை வரை ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் பெரிதும் குறைந்துள்ளது.

