/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
திருச்சி ஜங்ஷன் ரயில்வே பாலம் மூடல்
/
திருச்சி ஜங்ஷன் ரயில்வே பாலம் மூடல்
ADDED : அக் 13, 2024 07:13 AM
திருச்சி : திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையப் பகுதியில், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழைய பாலத்திற்கு அருகே, திருச்சி மாநகருக்குள் வரும் வாகனங்களுக்காக, ஏற்கனவே புதிய பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
போக்குவரத்து நெரிசல் காரணமாக, மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து, மதுரை பை - பாஸ் சாலைக்கு செல்லும் வழித்தடமாக பயன்படுத்தப்படும் பழைய பாலத்தை இடித்துவிட்டு, 138 கோடி ரூபாய் செலவில் புதிய பாலம் கட்டப்பட உள்ளது.
செப்., 21ம் தேதி அதற்கான வரைபடத்துடன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு புதிய பாலம் கட்டுவது தொடர்பான அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
திருச்சி, ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே உள்ள பழைய ரயில்வே பாலத்தை அகற்றி, புதிய பாலம் கட்டுவதற்கான பணிகள் துவங்கி உள்ளது. அதனால், பழைய பாலம் நேற்று நள்ளிரவு முதல் மூடப்பட்டு, அவ்வழியேயான போக்குவரத்து, மாற்றி விடப்பட்டுள்ளது.