/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
திருச்சி புது மாப்பிள்ளை சேலத்தில் கொடூர கொலை
/
திருச்சி புது மாப்பிள்ளை சேலத்தில் கொடூர கொலை
ADDED : ஜன 05, 2024 12:04 AM
சூரமங்கலம்:திருச்சி மாவட்டம், துறையூர் அருகே ஆலந்துடையான்பட்டியை சேர்ந்த நடராஜ் மகன் தியாகு, 26; கட்டட தொழிலாளியான இவருக்கு, நான்கு மாதங்களுக்கு முன் திருமணமானது.
இவர், ஐந்து நாட்களுக்கு முன், சேலம், ஜாகீர்காமிநாயக்கன்பட்டி, பூனைக்கரட்டில் உள்ள அய்யம்பெருமாள், 51, வீட்டுக்கு வாடகைக்கு வந்தார். இவரை, திருச்சி, துறையூரை சேர்ந்த பாலன், 30, அவரது மனைவி வரலட்சுமி ஆகியோர் வேலைக்கு சேலம் அழைத்து வந்தனர்.நேற்று முன்தினம் இரவு, வீட்டின் மொட்டை மாடியில் மது அருந்தியவர், நேற்று காலை பார்த்தபோது கழுத்து நெரிக்கப்பட்டு, அந்தரங்க உறுப்பு அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
சூரமங்கலம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர். பாலன், வரலட்சுமி தலைமறைவானதால், அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.