/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
தனி வருவாய் கிராமமாக இருந்திருந்தால் "மாஜி'யிடம் ஏமாந்திருக்க மாட்டோம்
/
தனி வருவாய் கிராமமாக இருந்திருந்தால் "மாஜி'யிடம் ஏமாந்திருக்க மாட்டோம்
தனி வருவாய் கிராமமாக இருந்திருந்தால் "மாஜி'யிடம் ஏமாந்திருக்க மாட்டோம்
தனி வருவாய் கிராமமாக இருந்திருந்தால் "மாஜி'யிடம் ஏமாந்திருக்க மாட்டோம்
ADDED : ஜூலை 25, 2011 01:55 AM
திருச்சி: 'புங்கனூர் கிராமத்தை தனி வருவாய் கிராமமாக தரம் உயர்த்த வேண்டும்.
தனி வருவாய் கிராமமாக இல்லாமல் போனதால் தான் முன்னாள் அமைச்சர் நேருவின் கல்லூரிக்காக புங்கனூர் ஏரி தாரை வார்க்கப்பட்டது எங்களுக்கு தெரியாமல் போனது' என கிராம சபை கூட்டத்தில் புங்கனூர் கிராம மக்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
திருச்சி மாவட்டத்தில் 408 கிராம பஞ்சாயத்துகளிலும் நேற்று முன்தினம் ஒரே நாளில் கிராமசபை கூட்டம் அந்தந்த பஞ்சாயத்தில், தலைவர்கள் தலைமையில் நடந்தது. மணிகண்டம் யூனியனுக்குட்பட்ட புங்கனூர் பஞ்சாயத்துக்கான கிராமசபா கூட்டம் அங்குள்ள சமுதாயக் கூடத்தில் நடந்தது.
கூட்டத்தில், திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன், திட்ட அலுவலர் சந்தோஷ்குமார், உத வி அலுவலர் மணி, கிராம பஞ்சாயத்து தலைவர் பாக்கியராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியம், அல்ஃபோன்ஸ் மேரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கிராம சபைக்கூட்டத்தில் திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீ பேசியதாவது: நாட்டில் மக்களாட்சி நடைபெறுகிறது என்பதை உறுதிப்படுத்தவே இதுபோன்ற கிராமசமை கூட்டங்கள் நடத்தப்படுகிறது. கிராம பஞ்சாயத்தகளின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் என்பதை கருத்தில் கொண்டு இந்த கூட்டம் நடக்கிறது. மக்கள் நேரடியாக பயன்பெற வேண்டும் என்பதுக்காக உள்ளாட்சிகளுக்கு பல்வேறு அதிகாரங்கள் பரவாலக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சிகளுக்கு ஒதுக்கும் நிதி முழுமையாக சென்றடைய வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. நீங்களே உங்கள் கிராமத்தை கட்டமைத்துக் கொ ள்ள வேண்டும் என்பதுக்காகவும், உங்களின் சிந்தனைக்கேற்ப கிராமத்தை வடிவமைக்கவும் இந்த கூட்டம் நடக்கிறது. நீங்களே உங்கள் கிராமத்தில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நூறு நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வங்கி மூலம் பணம் தருவதால் தாமதமாவதாகவும், அதனால் பஞ்சாயத்து மூலம் பணம் தர வேண்டும் எ னவும் மக்கள் கோரிக்கை வை த்தனர். புங்கனூர் கிராமம் தாயனூர் வருவாய் கிராமத்துக்கள் வருகிறது. இதில், புங்கனூர், தாயனார், அதவத்தூர் ஆகிய மூ ன்று கிராமங்கள் அடக்கம். புங்கனூரில் 5000 மக்கள் தொகை உள்ளது; பள்ளி, கல்லூரி உள்ளது; தனி கூட்டுறவு வங்கி, பால் கூட்டுறவு நிலையம் ஆகியன உள்ளன. எனவே புங்கனூரை தனி வருவாய் கிராமமாக அறிவிக்க வேண்டும் என தலைவர் பாக்கியராஜ் உள்பட அனைவரும் வலியுறுத்தினர்.
அதற்கு கலெக்டர் ஜெயஸ்ரீ, ''அதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் அதிகாரம் இல்லை. அரசு தான் முடிவு செய்ய வேண்டும். இதுபற்றி அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு வேண்டிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,'' என்றார்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ''முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயத்தின் 'கேர்' கல்லூரி கட்டவும், ரிங்ரோடு அமைக்கவும் புங்கனூர் ஏரி தாரை வார்க்கப்பட்டது. அப்போது, தாயனூர் வருவாய் கிராம எல்லைக்குள் வருவதாக கூறி எங்களை ஏமாற்றிவிட்டனர். தனி வருவாய் கிராமமாக இருந்திருந்தால் இந்த அவலம் நேர்ந்திருக்காது,'' என்று பொதுமக்கள் கலெக்டரிடம் புலம்பினர்.

