/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
சிறுவனை மது குடிக்க வைத்து வீடியோ
/
சிறுவனை மது குடிக்க வைத்து வீடியோ
ADDED : ஜன 19, 2025 01:19 AM
திருச்சி:திருச்சி, சமயபுரத்தில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ, 'இது என் அண்ணன் மகன்' என்ற அறிமுகத்துடன் துவங்குகிறது.
அதில், ஆட்டோ டிரைவர் ஒருவர், 7 வயது சிறுவன் முன் மது அருந்துகிறார். அந்த மதுவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் சிறுவனிடம் கொடுத்து குடிக்க வைக்கிறார்.
மது குடிக்கும் சிறுவனுக்கு, கோழி இறைச்சியை எடுத்துக் கொடுத்து, சிறுவன் மது குடிப்பதை அடையாளப்படுத்த ஒரு பீர் பாட்டிலையும் அவன் அருகில் வைக்கின்றனர். அந்த வீடியோவை ஆட்டோ டிரைவரின் முகநுால் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ரீல்ஸ் மோகத்தில் இதுபோன்ற வீடியோக்களை எடுத்து, சமூக வலைதளத்தில் பரப்புபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.