/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
தேடப்பட்ட குற்றவாளி விமான நிலையத்தில் சிக்கினார்
/
தேடப்பட்ட குற்றவாளி விமான நிலையத்தில் சிக்கினார்
ADDED : ஜூன் 01, 2025 11:26 PM
திருச்சி:சைபர் கிரைம் வழக்கில் சிக்கி தலைமறைவாக இருந்த மலேஷிய பயணி, திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள கொத்தைமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை, 29. இவர் மீது, ஆன்லைன் பணமோசடி புகாரில், திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
விசாரணைக்கு பயந்து, ராஜதுரை, மலேஷியாவுக்கு தப்பிச் சென்றார். அவரை பிடிக்க, அனைத்து விமான நிலையங்களுக்கும், 'லுக் அவுட் நோட்டீஸ்' அளிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று காலை மலேஷியாவில் இருந்து வந்த விமான பயணியரை, திருச்சி விமான நிலைய இமிகிரேஷன் அதிகாரிகள் சோதித்தபோது, ராஜதுரை பாஸ்போர்ட்டுக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது தெரிய வந்தது.
திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசாருக்கு அதிகாரிகள் தகவல் அளித்தனர். அங்கிருந்து வந்த போலீசார், ராஜதுரையை கைது செய்தனர்.