/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
குரங்கு பறித்த மொபைலை மீட்க முயன்றவர் விழுந்து பலி
/
குரங்கு பறித்த மொபைலை மீட்க முயன்றவர் விழுந்து பலி
குரங்கு பறித்த மொபைலை மீட்க முயன்றவர் விழுந்து பலி
குரங்கு பறித்த மொபைலை மீட்க முயன்றவர் விழுந்து பலி
ADDED : ஏப் 04, 2024 10:28 PM
வேலுார்:வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கொட்டமிட்டாயைச் சேர்ந்த சரவணன் மகன் தரணிவேல், 17. இவர், குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லுாரியில், 2ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர், தன் நண்பர் கவின்குமார் என்பவருடன், நேற்று முன்தினம் மாலை கல்லுாரி முடிந்து, அப்பகுதியில் உள்ள கைலாசகிரி மலைப்பகுதியில், ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தார்.
சாலையோரம் அமர்ந்திருந்த தரணிவேலின் மொபைல்போனை, குரங்கு பறித்துச் சென்றது. மொபைல்போனை மீட்க தரணிவேல், குரங்கை துரத்திச் சென்றபோது, 100 அடி உயர மலையிலிருந்து பள்ளத்தில் தவறி விழுந்து, சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து, உமாராபாத் போலீசார் விசாரிக்கின்றனர்.