/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
பயிற்சி வகுப்பில் மது போதை தலைமை காவலர் 'சஸ்பெண்ட்'
/
பயிற்சி வகுப்பில் மது போதை தலைமை காவலர் 'சஸ்பெண்ட்'
பயிற்சி வகுப்பில் மது போதை தலைமை காவலர் 'சஸ்பெண்ட்'
பயிற்சி வகுப்பில் மது போதை தலைமை காவலர் 'சஸ்பெண்ட்'
ADDED : மே 23, 2024 02:28 AM
வேலுார்:இந்தியாவில் திருத்தப்பட்ட, 3 குற்றவியல் சட்டங்கள் ஜூன், 1 முதல், நாடு முழுவதும் நடைமுறைக்கு வருகின்றன. இதற்கான பயிற்சி மாவட்ட அளவில், தேர்வு செய்யப்பட்ட போலீசாருக்கு, அந்தந்த மாவட்ட உட்கோட்ட அளவில் வழங்கப்படுகிறது. அதன்படி, வேலுார் உட்கோட்டத்திற்கான பயிற்சி, வி.ஐ.டி., வளாகத்தில் நடந்தது.
முதற்கட்ட பயிற்சியில் ஏ.டி.எஸ்.பி., பாஸ்கரன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையில் கடந்த, 20ல் நடந்தது. இதில், காட்பாடி போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் தலைமை காவலர் கோபி பங்கேற்றார். புதிய சட்டங்கள் குறித்து, இன்ஸ்பெக்டர் பாரதி, தலைமை காவலர் கோபியிடம் விளக்கினார்.
அப்போது, மதுபோதையில் இருந்த கோபி, இன்ஸ்பெக்டரிடம் அநாகரிகமாக பேசி, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரை அங்கிருந்து வெளியேற்றிய சக காவலர்கள், வேலுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, பரிசோதித்ததில், அவர் மதுபோதையில் இருப்பது உறுதியானது.
இதையடுத்து, வேலுார் எஸ்.பி., மணிவண்ணன் நேற்று கோபியை, 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.

