sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

வேலூர்

/

ஹெச்.எம்., இடமாற்றம் மாணவர்கள் எதிர்ப்பு

/

ஹெச்.எம்., இடமாற்றம் மாணவர்கள் எதிர்ப்பு

ஹெச்.எம்., இடமாற்றம் மாணவர்கள் எதிர்ப்பு

ஹெச்.எம்., இடமாற்றம் மாணவர்கள் எதிர்ப்பு


ADDED : ஜூலை 10, 2024 02:06 AM

Google News

ADDED : ஜூலை 10, 2024 02:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்ன அல்லாபுரம்:வேலுார் மாவட்டம், சின்ன அல்லாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், 400க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இங்கு, 11 ஆண்டாக தலைமை ஆசிரியராக பணிபுரிந்தவர் செந்தில்குமார்.

இவர், பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை இருந்தும், சொந்த செலவில் மாற்று ஏற்பாடு செய்து, 80 பேர் படித்த பள்ளியில், 400 மாணவ - மாணவியர் படிக்கும் அளவிற்கு பள்ளியை உயர்த்தினார்.

அப்பகுதி மாணவ - மாணவியர் மற்றும் பெற்றோருக்கு சிறந்த ஆசிரியராக அறியப்பட்டார். தற்போது, அவர், 5 கி.மீ., தள்ளியுள்ள சதுப்பேரி துவக்கப்பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அதிர்ச்சியடைந்த மாணவ - மாணவியர் மற்றும் பெற்றோர், இதை கண்டித்து, பள்ளி முன் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்வித்துறை அதிகாரிகள் பேச்சு நடத்தி, சின்ன அல்லாபுரம் பள்ளியையும், செந்தில்குமார் கூடுதலாக கவனித்துக்கொள்வார் என உறுதி அளித்தனர். இதையடுத்து, மாணவ - மாணவியர் மற்றும் பெற்றோர் போராட்டத்தை கைவிட்டனர்.






      Dinamalar
      Follow us