/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
கோட்டையில் பவுர்ணமி வலம் 50 பேர் மீது போலீசார் வழக்கு
/
கோட்டையில் பவுர்ணமி வலம் 50 பேர் மீது போலீசார் வழக்கு
கோட்டையில் பவுர்ணமி வலம் 50 பேர் மீது போலீசார் வழக்கு
கோட்டையில் பவுர்ணமி வலம் 50 பேர் மீது போலீசார் வழக்கு
ADDED : மார் 27, 2024 01:10 AM
வேலுார்:வேலுார் கோட்டையில், அனுமதியின்றி வலம் வந்த ஹிந்து முன்னணி பிரமுகர்கள், 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பவுர்ணமி தோறும் திருவண்ணாமலையில் கிரிவலம், கலசப்பாக்கத்தில் பர்வதமலை, தேவிகாபுரத்தில் கனகிரிஸ்வரர் மலை ஆகியவற்றை பக்தர்கள் வலம் வந்து சுவாமியை வழிபட்டு வருகின்றனர்.
இதேபோல, வேலுார் ஜலகண்டேஸ்வரர் கோவில் அமைந்துள்ள கோட்டையை, பவுர்ணமிதோறும் வலம் வருவதை ஹிந்து முன்னணியினர் துவக்கியுள்ளனர்.
கடந்த இரு மாதமாக பவுர்ணமியின்போது, 50 பேர் கோட்டையை சுற்றி வலம் வந்தனர். வழக்கம்போல, ஹிந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷ், பொருளாளர் பாஸ்கரன், பாலாஜி உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் இரவு கோட்டையை வலம் வந்தனர்.
அனுமதியின்றி கோட்டையை வலம் வந்ததாக மகேஷ் உள்ளிட்ட, 50 பேர் மீது, வேலுார் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.