/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
'கர்நாடகாவுடன் பேசி தீர்வு தற்கொலைக்கு சமம்'
/
'கர்நாடகாவுடன் பேசி தீர்வு தற்கொலைக்கு சமம்'
ADDED : ஆக 02, 2024 10:11 PM
வேலுார்:வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த கரசமங்கலத்தில், ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவை, அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். பின், அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டி:
கர்நாடகாவும், தமிழகமும் மேகதாது அணை விவகாரத்தில் இதுவரை, 38 முறை பேசியுள்ளன. ஆனாலும், சுமூக தீர்வு எட்டப்படவில்லை. பிரதமராக தேவுகவுடா இருந்தபோது, அப்போதைய கர்நாடக முதல்வர் படேலும், மறைந்த முதல்வர் கருணாநிதியும் பேசினர். பிரச்னையை தீர்க்க முடியவில்லை.
வி.பி.சிங் பிரதமராக இருந்த காலத்தில் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. பின் தமிழகம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார், பிரதமர் மோடியை சந்தித்தபோது அவர், 'காவிரி பிரச்னை குறித்து, தமிழகத்துடன் பேசி தீர்த்து கெள்ளுங்கள்' என கூறியுள்ளார். ஆனால், பேச்சு வாயிலாக தீர்த்துக்கொள்ளலாம் என்பது, நாம் தற்கொலை செய்து கொள்வதற்கு சமம்.
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, மார்கண்டேயன் அணை கட்டுகின்றனர். அதற்கு நாம் நடுவர் மன்றம் கேட்டோம். ஆனால், அவர்கள் இரண்டு ஆண்டுகளாகியும் இன்னும் பேசவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.