/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
வேலுார் லோக்சபா தொகுதியில் ஓட்டு இயந்திரங்கள் சரிபார்ப்பு
/
வேலுார் லோக்சபா தொகுதியில் ஓட்டு இயந்திரங்கள் சரிபார்ப்பு
வேலுார் லோக்சபா தொகுதியில் ஓட்டு இயந்திரங்கள் சரிபார்ப்பு
வேலுார் லோக்சபா தொகுதியில் ஓட்டு இயந்திரங்கள் சரிபார்ப்பு
ADDED : ஆக 29, 2024 02:20 AM
வேலுார்:கடந்த லோக்சபா தொகுதியில், வேலுார் தொகுதியில் போட்டியிட்ட, தி.மு.க., வேட்பாளர் கதிர் ஆனந்த், 5,68,692 ஓட்டுகளும், பா.ஜ., வேட்பாளர் ஏ.சி.சண்முகம், 3,52,990 ஓட்டுகளும் பெற்றனர்.
இதில், 2,15,702 ஓட்டுகள் வித்தியாசத்தில், கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், பா.ஜ., வேட்பாளர் சண்முகம், வேலுார் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, ஆறு சட்டசபை தொகுதிகளிலும், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சரியாக செயல்படவில்லை என, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதன்படி, நீதிமன்றம், ஆறு சட்டசபை தொகுதிகளிலும், தலா ஒரு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை தேர்வு செய்து, அதிலுள்ள பதிவுகளை அழித்து விட்டு, அதில் மீண்டும் ஓட்டுப்பதிவு செய்து இயந்திரங்கள் சரியாக செயல்படுகிறதா என, பா.ஜ., ஏஜன்டுகள் முன்னிலையில், சோதனை செய்ய உத்தரவிட்டது.
அதன்படி நேற்று, 2வது நாளாக ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஓட்டுகள் அழிக்கப்பட்டு, அந்த இயந்திரத்தில் புதிதாக ஓட்டு போடப்பட்டு சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. இன்றுவரை இப்பணி நடக்கிறது.