/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
மாட்டுவண்டியில் சிக்கிவாலிபர் பலி
/
மாட்டுவண்டியில் சிக்கிவாலிபர் பலி
ADDED : மார் 13, 2025 03:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குடியாத்தம்:வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த அணங்காநல்லுார் பாலாற்றில், சட்டவிரோதமாக சிலர் மாட்டு வண்டியில் மணல் கடத்தி வருகின்றனர்.
நேற்று காலை 6:00 மணியளவில், அணங்காநல்லுாரில், அதே பகுதியை சேர்ந்த சிலம்பரசன், 24, என்பவர் மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்துள்ளார்.
அப்போது, தவறி சாலையில் விழுந்த அவர் மீது, மாட்டு வண்டி ஏறியதில், சம்பவ இடத்திலேயே பலியானார். குடியாத்தம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.