/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
200 ஏக்கரில் விரைவில் தொழில் பூங்கா
/
200 ஏக்கரில் விரைவில் தொழில் பூங்கா
ADDED : பிப் 09, 2024 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேலுார்:வேலுார் மாவட்டம் கரிகிரி பகுதியில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில், 42.56 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட, 400 அடுக்குமாடி குடியிருப்புகளை அமைச்சர் துரைமுருகன் நேற்று தொடங்கி பேசியதாவது:
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் வகையில், வள்ளிமலை அருகே மகிமண்டலம் பகுதியில், 200 ஏக்கரில் தொழில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சேர்க்காடு பகுதியில், அனைத்து வசதிகளுடன் கூடிய, 100 படுக்கை கொண்ட மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.

