/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
மருமகனை கட்டையால் தாக்கிய மாமனார் உட்பட 4 பேர் கைது
/
மருமகனை கட்டையால் தாக்கிய மாமனார் உட்பட 4 பேர் கைது
மருமகனை கட்டையால் தாக்கிய மாமனார் உட்பட 4 பேர் கைது
மருமகனை கட்டையால் தாக்கிய மாமனார் உட்பட 4 பேர் கைது
ADDED : அக் 27, 2024 04:21 AM
ஒடுகத்துார்: வேலுார் அருகே, மருமகனை உருட்டு கட்டையால் தாக்கிய மாமனார் உட்பட, 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேலுார் மாவட்டம், ஒடுகத்துார் அடுத்த பெரிய ஏரியூரை சேர்ந்-தவர் கூலித்தொழிலாளி மணி, 55. இவர் மனைவி மல்லிகா, 50. இவர்களது மகன் ஆட்டோ டிரைவர் லோகநாதன், 29. அதே கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ராஜா, 55. இவர் மனைவி உஷாராணி, 45. இவர்களது மகன்கள் கார்த்தி, 22, வெங்கடேசன், 23, ரஞ்சித்குமார், 27. இவர்கள், அனைவரும் குடும்பத்துடன் பெங்களூருவில் தங்கி, கூலி வேலை செய்கின்-றனர்.
ராஜாவின் மகளுக்கும், மணி மகன் லோகநாதனுக்கும் கடந்த, 3 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. அன்று முதல், மனை-வியை லோகநாதன் அடித்து துன்புறுத்தி வந்தார். அதேபோல் நேற்று முன்தினமும் மனைவியை தாக்கினார்.
ஆத்திரமடைந்த ராஜா மற்றும் அவரது மகன்கள், 3 பேரும் சேர்ந்து, லோகநாதன் வீட்டிற்கு சென்று, மணி, அவர் மனைவி மல்லிகா மற்றும் லோகநாதனை கட்டையால் சரமாரியாக தாக்கி-யதில் அவர்கள் படுகாயமடைந்தனர். வேப்பங்குப்பம் போலீசார், ராஜா, அவரது மகன்கள் கார்த்தி, வெங்கடேசன், ரஞ்சித்குமார் ஆகிய, 4 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.