/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
அரிவாளுடன் மோதிய 4 வாலிபர்கள் கைது
/
அரிவாளுடன் மோதிய 4 வாலிபர்கள் கைது
ADDED : செப் 27, 2024 02:47 AM
வேலுார்:வேலுார், சின்ன அல்லாபுரம் பனந்தோப்பு பகுதியை சேர்ந்தவர், அகமது பாஷா. இவரது மகன்கள் ஜாகீர், 32, ஜாபீர், 21. இவர்களின் உறவினர்கள் இம்தியாஸ், 20, ஜாபர், 19. இவர்கள், அடுத்தடுத்த தெருக்களில் வசிக்கின்றனர்.
இரு குடும்பத்தினருக்கும் ஏற்கனவே, முன் விரோதம் இருந்து வந்ததால், இரு குடும்பத்தினரும் அடிக்கடி மோதிக்கொண்டனர். நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு, ருக்சனா என்பவரது வீட்டின் அருகே ஜாகீர், ஜாபீர் நின்று கொண்டிருந்தனர். அவ்வழியாக வந்த இம்தியாஸ் மற்றும் ஜாபர் ஆகியோர், ஜாகீருடன் வாக்குவாதம் செய்த நிலையில், கைகலப்பாக மாறியது.
அப்போது, ஜாகீர் அரிவாளால் இம்தியாசை வெட்ட முயன்றார். அதிர்ச்சியடைந்த இம்தியாஸ் வீட்டிற்கு சென்று அரிவாளை எடுத்து வந்தார். இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் அரிவாளால் தாக்க முயன்றனர். இதை கண்ட அப்பகுதியினர் சண்டையை விலக்கி விட்டு, சமாதானம் செய்து அனுப்பினர்.
பாகாயம் போலீசார் வழக்குப் பதிந்து, அரிவாளால் மோதிக்கொண்ட இரு தரப்பு சகோதரர்களான நான்கு பேரையும் கைது செய்தனர்.

