/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
வீட்டின் முன் நிறுத்தியிருந்த கார், மினி லாரி எரிந்து நாசம்
/
வீட்டின் முன் நிறுத்தியிருந்த கார், மினி லாரி எரிந்து நாசம்
வீட்டின் முன் நிறுத்தியிருந்த கார், மினி லாரி எரிந்து நாசம்
வீட்டின் முன் நிறுத்தியிருந்த கார், மினி லாரி எரிந்து நாசம்
ADDED : ஜன 25, 2024 01:05 PM
காட்பாடி : காட்பாடி அருகே, வீட்டின் முன் நிறுத்தியிருந்த கார் மற்றும் மினி லாரி மர்மமான முறையில் எரிந்து நாசமானது.
வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த அருப்புமேடு பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரஷீக், 41; இவரது வீட்டின் முன், இவருக்கு சொந்தமான இன்னோவா கார் மற்றும் டாடா ஏஸ் மினி லாரியை நிறுத்தி வைத்திருந்தார். நேற்று அதிகாலை அந்த இரு வாகனங்களும், மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தன. அப்துல் ரஷீக் தகவலின்படி வந்த, காட்பாடி தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். இருப்பினும், 2 வாகனங்களும் தீயில் எரிந்து நாசமாகின. இது குறித்து, காட்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.