/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
10 மணி நேர நெரிசல் ஏற்படுத்திய லாரிக்கு ரூ.1.40 லட்சம் அபராதம்
/
10 மணி நேர நெரிசல் ஏற்படுத்திய லாரிக்கு ரூ.1.40 லட்சம் அபராதம்
10 மணி நேர நெரிசல் ஏற்படுத்திய லாரிக்கு ரூ.1.40 லட்சம் அபராதம்
10 மணி நேர நெரிசல் ஏற்படுத்திய லாரிக்கு ரூ.1.40 லட்சம் அபராதம்
ADDED : மே 23, 2025 03:19 AM
வேலுார்:அளவுக்கு அதிகமான கிரானைட் கற்களை ஏற்றிச் சென்று, பாதி வழியில் பழுதாகி, 10 மணி நேரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய லாரிக்கு, 1.40 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
வேலுார் மாவட்டம், பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானத்தில், மேம்பாலம் அமைக்கும் பணி நடப்பதால், வாகனங்கள் அணுகு சாலையில் செல்கின்றன.
கடந்த, 20ல் சூளகிரியில் இருந்து சென்னைக்கு கிரானைட் கற்கள் ஏற்றி சென்ற லாரி, வேகத்தடையில் ஏறி, இறங்கியதில், பின்சக்கர சேஸ் உடைந்து நடுரோட்டில் நின்றது. இதனால், 10 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, 5 கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்தன.
இதுகுறித்து பள்ளிகொண்டா போலீசார் நடத்திய விசாரணையில், 28 டன் கற்களை ஏற்றி செல்ல வேண்டிய லாரியில், 62 டன் கிரானைட் கற்கள் ஏற்றி சென்றதால், லாரி பழுதானது தெரியவந்தது.
இதையடுத்து, குடியாத்தம் மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா, லாரியை பறிமுதல் செய்து, 1.40 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
லாரி டிரைவர் சுல்தானுக்கு லைசென்ஸ் மற்றும் லாரிக்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.