/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
செயற்கைகோள் மூலம் கண்காணித்து சுங்க கட்டணம் வசூலிக்க முடிவு
/
செயற்கைகோள் மூலம் கண்காணித்து சுங்க கட்டணம் வசூலிக்க முடிவு
செயற்கைகோள் மூலம் கண்காணித்து சுங்க கட்டணம் வசூலிக்க முடிவு
செயற்கைகோள் மூலம் கண்காணித்து சுங்க கட்டணம் வசூலிக்க முடிவு
ADDED : ஜன 13, 2024 11:35 AM
வேலுார் : ''செயற்கைகோள் மூலம், வாகனங்கள் செல்வதை கண்காணித்து சுங்க கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது,'' என, மத்திய இணை அமைச்சர் வி.கே.
சிங் கூறினார். வேலுார் பழைய பஸ்ஸ்டாண்டில், விவேகானந்தர் பிறந்த நாள் விழா நேற்று நடந்தது. வி.ஐ.டி., பல்கலை துணைத் தலைவர் செல்வம் தலைமை வகித்தார். மத்திய தரைவழி மற்றும் விமான போக்குவரத்து துறை அமைச்சர் வி.கே.சிங், அலங்கரிக்கப்பட்ட விவேகானந்தர் திருவுருவ படத்திற்கு மலர் துாவி மரியாதை செய்தார்.பின் அவர், நிருபர்களிடம் கூறியதாவது.வேலுார் விமான நிலையம், சிறிய ஓடுதளமாக உள்ளதால் பெரிய விமானங்களை இயக்க முடியவில்லை. உள்நாட்டு சிறு விமானங்கள் மட்டுமே இயங்குகிறது. ஓடுதளம் பெரியதாக்க நடவடிக்கை எடுத்து, பின் பெரிய விமானங்கள் இயக்குவது குறித்து ஆலோசிக்க உள்ளோம். நாடு முழுவதும், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் முழுமையாக மூடப்படும். இனி செயற்கை கோள் மூலம் கண்காணித்து, சுங்க கட்டணம் வசூலிக்கப்படும். இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கூறினார். --------