/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
மாமியாரை வெட்டிய போதை மருமகன் கைது
/
மாமியாரை வெட்டிய போதை மருமகன் கைது
ADDED : நவ 11, 2024 12:25 AM
வேலுார்; வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பிச்சனுார், காளியம்மன் பட்டியை சேர்ந்த சமையல் மாஸ்டர் சந்திரசேகர், 42. இவரது மனைவி மஞ்சு ஈஸ்வரி, 38. தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர்.
சில ஆண்டுகளாக சந்திரசேகர் குடும்பத்தாருடன் மாமியார் வசந்தா, 65, வசித்து வருகிறார். சந்திரசேகர் மது போதையில், அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதை தட்டிக்கேட்ட வசந்தாவிடமும் தகராறில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் இரவு, வழக்கம்போல் போதையில் வந்த சந்திரசேகர், மனைவியிடம் தகராறு செய்ததை, மாமியார் கண்டித்துள்ளார்.
ஆத்திரமடைந்த சந்திரசேகர், கத்தியால் மாமியாரை சரமாரியாக வெட்டினார்.
இடது கை ஆள்காட்டி விரல் துண்டான நிலையில், மார்பு, கை உள்ளிட்ட பல பகுதிகளில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. குடியாத்தம் அரசு மருத்துவமனையில் வசந்தா சேர்க்கப்பட்டார். குடியாத்தம் போலீசார், சந்திரசேகரை கைது செய்தனர்.