/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
'காலாவதி கல்குவாரிகள் ஒரு வாரத்தில் மூடப்படும்'
/
'காலாவதி கல்குவாரிகள் ஒரு வாரத்தில் மூடப்படும்'
ADDED : ஜன 14, 2024 04:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேலுார்: ''தமிழகம் முழுவதும் அனுமதியின்றி செயல்படும் கல்குவாரிகள் மற்றும் காலாவதி கல்குவாரிகள், ஒரு வாரத்துக்குள் மூடப்படும்,'' என, அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
வேலுார் மாவட்டம் அணைக்கட்டை அடுத்த கெங்கநல்லுாரில், சமத்துவ பொங்கல் விழா நடந்தது. இதில் பங்கேற்ற அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக முழுவதும், காலாவதியான மற்றும் அனுமதியின்றி செயல்படும் அனைத்து கல்குவாரிகளும், இன்னும் ஒரு வாரத்திற்குள்ளாக முழுவதுமாக மூடப்படும். வேலுார் திருவள்ளுவர் பல்கலை ஊழல் குறித்து, பேராசிரியர்கள், பல்கலை பணியாளர்கள் என்னை சந்தித்து புகார் தெரிவித்தால், நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.