/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
தள்ளுவண்டியில் விற்ற பட்டாசுகள் பறிமுதல்
/
தள்ளுவண்டியில் விற்ற பட்டாசுகள் பறிமுதல்
ADDED : நவ 01, 2024 06:54 AM
வேலுார் : வேலுாரில், விதி மீறி சாலையோரம் வைத்து விற்ற பட்டாசுகளை, வேலுார் தாசில்தார் முரளிதரன் தலைமையிலான வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர்.
வேலுாரில் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், பட்டாசுகளை கட்டடத்தில் வைத்து, பாதுகாப்பு அம்சங்களோடு விற்பனை செய்ய, வருவாய் துறை, தீயணைப்பு துறை, வணிக வரித்துறை உள்பட பல்வேறு துறைகளின் சார்பில் ஆய்வு செய்து அனுமதி வழங்கப்பட்டது. தெருக்களில் பட்டாசு விற்க அனுமதியில்லை.
வேலுாரின் பல இடங்களில் சாலையோரம் பட்டாசு விற்பதாக, வேலுார் தாசில்தார் முரளிதரனுக்கு புகார் சென்றது. நேற்று அவர் தலைமையிலான வருவாய் துறையினர், வேலுார் அண்ணா சாலை, பழைய மீன் மார்க்கெட், குட்டைமேடு உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர். அப்போது விதிகளை மீறி சாலையோரம் தள்ளுவண்டியில் விற்பனை செய்த, 40 பட்டாசு பெட்டிகளை பறிமுதல் செய்தனர்.
மேலும், வருவாய் துறையினர் வருவதை கண்டதும், பட்டாசு விற்றவர்கள் தப்பியோடினர். அவர்களை வருவாய் துறையினர் தேடி வருகின்றனர்.

