ADDED : மே 17, 2025 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேலுார்: வேலுார் மாவட்டம், காட்பாடியை சேர்ந்தவர் கட்டட மேஸ்திரி சுதாகர், 27. இவருக்கும், உறவினர் மகளான வேலுாரை சேர்ந்த, 9ம் வகுப்பு படிக்கும், 14 வயது சிறுமிக்கும் கடந்த ஆண்டு பழக்கம் ஏற்பட்டது.
கடந்தாண்டு செப்டம்பரில் வீட்டிலிருந்து வெளியே சென்ற சிறுமி மீண்டும் திரும்பவில்லை. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் இருந்த சுதாகரையும், சிறுமியையும் நேற்று போலீசார் மீட்டனர்.
இதில், சிறுமியை சுதாகர் திருமணம் செய்து கொண்டதும், தற்போது அவர் கர்ப்பமாக இருப்பதும் தெரிய வந்தது. போலீசார் போக்சோவில் சுகாதரை கைது செய்து விசாரிக்கின்றனர்.