/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
டிச., 17ல் வேலுார் வருகிறார் ஜனாதிபதி முர்மு
/
டிச., 17ல் வேலுார் வருகிறார் ஜனாதிபதி முர்மு
ADDED : டிச 11, 2025 05:30 AM
வேலுார்: வேலுார், ஸ்ரீபுரம் நாராயணி பொற்கோவிலுக்கு டிச., 17ல் ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை தர உள்ளார்.
வேலுார் மாவட்டம், அரியூர் அடுத்த ஸ்ரீபுரத்தில், ஸ்ரீ நாராயணி பீடம் பொற்கோவில் உள்ளது. இங்கு டிச., 17ம் தேதி காலை 11:00 மணிக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு வர உள்ளார்.
அவருடன் தமிழக கவர்னர் ரவி, மத்திய அமைச்சர் முருகன் ஆகியோர் வர உள்ளனர்.
ஸ்ரீ நாராயணி அம்மன், 1,800 கிலோ வெள்ளியால் அமைக்கப்பட்ட விநாயகர், சொர்ணலட்சுமி, பெருமாள் ஆகிய கோவில்களில் ஜனாதிபதி சுவாமி தரிசனம் செய்கிறார்.
பின், சக்தி அம்மாவிடம் ஆசி பெறுகிறார். கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தியான மண்டபத்தை திறந்து வைத்து, மரங்களை நடுகிறார்.
பின், 12:30 மணிக்கு வேலுாரில் இருந்து திருப்பதி புறப்பட்டு செல்கிறார்.
ஜனாதிபதி வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வேலுார் கலெக்டர் தலைமையில் நேற்று ஆலோசனை நடந்தது.

