/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
'பறவை காய்ச்சல் வராமல் தடுக்க மருந்து தெளிப்பு'
/
'பறவை காய்ச்சல் வராமல் தடுக்க மருந்து தெளிப்பு'
ADDED : பிப் 20, 2024 02:00 AM
வேலுார்:''பறவை காய்ச்சல், வராமல் தடுக்க, ஆந்திராவிலிருந்து வரும் வாகனங்களுக்கு மருந்து தெளித்து, மாவட்ட எல்லைக்குள் அனுமதிக்கப்படுகிறது,'' என, வேலுார் கலெக்டர் சுப்புலெட்சுமி கூறினார்.
வேலுார் மாவட்டம், சாத்துவாச்சாரியில், கூட்டுறவு துறை சார்பில், ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு, ஊட்டி தேயிலை துாள் வாங்குவோருக்கு, 'மஞ்சப்பை' வழங்கிய அவர், பின் நிருபர்களிடம் கூறியதாவது:
வேலுார் மாவட்டத்தில், தமிழகம் - ஆந்திரா எல்லையில் அமைக்கப்பட்டுள்ள நான்கு சோதனைச்சாவடிகளில், சுகாதாரத்துறை மூலம், பரிசோதனை செய்து, தடுப்பு மருந்துகள் தெளித்து, ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்கள், மாவட்ட எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றன.
நம் மாவட்டத்தில் பறவை காய்ச்சல் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

