/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
மின்கம்பம் நடும்போது மின்சாரம் பாய்ந்து இருவர் பலி
/
மின்கம்பம் நடும்போது மின்சாரம் பாய்ந்து இருவர் பலி
மின்கம்பம் நடும்போது மின்சாரம் பாய்ந்து இருவர் பலி
மின்கம்பம் நடும்போது மின்சாரம் பாய்ந்து இருவர் பலி
ADDED : நவ 28, 2024 12:55 AM
வேலுார், நவ. 28-
வேலுார் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த வேப்பங்குப்பம் பஞ்., உட்பட்ட ரங்கப்பன் கொட்டாய் பகுதியில், பஞ்., சார்பில் மின் விளக்கு அமைக்க, இரும்பால் ஆன மின்கம்பம் நடும் பணி நடந்தது.
வேப்பங்குப்பம் பம்ப் ஆப்ரேட்டர் முத்துக்குமரன், 45 மற்றும் அப்பகுதியை சேர்ந்த தொழிலாளி அசோக்குமார், 55, ஆகிய இருவரும் நேற்று மதியம், 2:00 மணி அளவில் அப்பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, இரும்பு மின் கம்பத்தை துாக்கி நிலை நிறுத்தும்போது, மின் கம்பம் நிலை தடுமாறி பக்கத்தில் சென்ற மின் கம்பி மீது உரசியது. இதில், மின்சாரம் பாய்ந்து இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.