sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

முடியாதென பொறுப்பை தட்டிக் கழிக்கக் கூடாது: பல்கலை., பதிவாளர் சுதா சேஷயன் அறிவுரை

/

முடியாதென பொறுப்பை தட்டிக் கழிக்கக் கூடாது: பல்கலை., பதிவாளர் சுதா சேஷயன் அறிவுரை

முடியாதென பொறுப்பை தட்டிக் கழிக்கக் கூடாது: பல்கலை., பதிவாளர் சுதா சேஷயன் அறிவுரை

முடியாதென பொறுப்பை தட்டிக் கழிக்கக் கூடாது: பல்கலை., பதிவாளர் சுதா சேஷயன் அறிவுரை


ADDED : ஜூலை 14, 2011 12:12 AM

Google News

ADDED : ஜூலை 14, 2011 12:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : நாட்டின் பாரம்பரியமும், கல்வி அறிவும் தான் பெண்களை முழுமை படுத்தும் என எம்.ஜி.ஆர்., பல்கலை., பதிவாளர் சுதாசேஷயன் பேசினார்.

விழுப்புரம் தெய்வானையம்மாள் மகளிர் கல்லூரியில் மாணவிகள் மன்ற நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. பேராசிரியர் புவனேஸ்வரி வரவேற்றார். முதல்வர் கஸ்தூரிபாய் துவக்கி வைத்தார். செயலாளர் செந்தில் குமார் முன்னிலை வகித்தார்.



சென்னை எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை., பதிவாளர் டாக்டர் சுதா சேஷயன் பங்கேற்று பேசியதாவது: மாணவிகள் கல்லூரியில் ஒருவருக்கொருவர் பேசிப்பழகி கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். பேசினால் தான் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும். நீங்கள் உயர்ந்த நிலை அடைந்து மாற்று கிரகத்திற்கே சென்றாலும் கூட நமது நாட்டின் பண்பாடு, கலாசாரத்தின் பெருமைகளை மறக்க கூடாது. இந்தியர்களாக பிறந்ததில் பெருமை கொள்ள வேண்டும். அந்த கர்வம் நமக்கும் இருக்க வேண்டும். நமது பாரம்பரியத்தில் அறிவியல், தொழில் நுட்ப வளர்ச்சி உண்டா என கேள்வி கேட்கலாம், நமது நாட்டின் பண்பாடு, கலாசாரம் நமக்கு இதை விட நிறைய கற்று கொடுத்துள்ளது. பல துறைகளில் சாதித்தவர்களாக இருந்தாலும் மனிதநேயத்தை கொடுப்பது நமது கலாசாரம் மட்டுமே. கல்வி, பாரம்பரியம் நம்மை முழுமைபடுத்தும். தொடர்ந்து இளமையாக இருக்க புதிய விஷயங்களை கற்று கொள்ள வேண்டும். கல்வி தான் நமக்கான பலமும், ஆயுதமும். பெண்கள் பல துறைகளில் உலகளவில் சாதித்து வருகின்றனர். அனைவரிடமும் திறமை உள்ளது. அதனை வெளிப்படுத்தினால் சாதிக்க முடியும். தன்னம்பிக்கையுடன் நம்மிடமுள்ள குறைகளை அகற்றி நிறைகளை செய்து முன்னேற வேண்டும். அனைவருக்கும் நேரம் பொதுவானது. நேரமில்லை என கூறுவதை ஒதுக்கி பணிகளை செய்தால் சாதனைதான். நமது முன்னோர்களின் அனுபவத்தை அறிந்து நாமும் சாதித்து காட்ட வேண்டும். கூட்டு முயற்சியால் நிறைய கற்றுக் கொள்ள முடியும். எனக்கு தெரியாது, என்னால் முடியாதென பொறுப்பை தட்டிக் கழிக்க கூடாது. எல்லாவற்றையுமே நம்மால் கற்க முடியும் செய்ய முடியும். இவ்வாறு சுதா சேஷயன் பேசினார். மாணவர் மன்ற தலைவர் இந்துமதி நன்றி கூறினார்.










      Dinamalar
      Follow us