/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்
/
மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்
ADDED : ஜூலை 14, 2011 12:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே மணல் கடத்திய டிராக்டரை தாசில்தார் பறிமுதல் செய்தார்.
சங்கராபுரம் தாசில்தார் கோகுலபத்மநாபன் அரசம்பட்டு கிராமத்தில் வாகன தணிக்கை மேற்கொண்டார். அந்த வழியாக வந்த டிராக்டரை மடக்கி சோதனை செய்த போது அனுமதியின்றி மணல் கடத்தியது தெரிந்தது. இது சம்பந்தமாக அரசம்பட்டு பெரியசாமி என்பவருக்கு சொந்தமான டிராக்டரை தாசில்தார் பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகிறார்.

