ADDED : ஜூலை 13, 2011 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் : திண்டிவனம் அருகே உள்ள தாதாபுரம் அரசு மேல் நிலைப் பள்ளி
மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா நடந்தது.
சென்னை
'இக்னைட் யங் மைண்ட்ஸ்' அறக்கட்டளை சார்பில் 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ்
2 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா தாதாபுரம் அரசு
பள்ளியில் நடந்தது.பள்ளியில் 352 மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. பள்ளி
தலைமை ஆசிரியர் லஷ்மிபதி தலைமை தாங்கினார். அறக்கட்டளை நிறுவனர் பிரபு,
உறுப்பினர்கள் மகேஷ், முருகன், சூர்யா, ஊராட்சி தலைவர் ஏழுமலை உட்பட பலர்
கலந்து கொண்டனர்.