/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திருட்டில் ஈடுபட்டவருக்கு 24 மாத சிறை தண்டனை
/
திருட்டில் ஈடுபட்டவருக்கு 24 மாத சிறை தண்டனை
ADDED : ஜூலை 14, 2011 12:05 AM
விழுப்புரம் : தொடர் திருட்டு சம்பவங்களை செய்து வந்தவருக்கு விழுப்புரம் கோர்டில் 24 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
விழுப்புரம் அடுத்த மேல்பாதி கிராமத்தை சேர்ந்தவர் குணா(36). இவர் கடந்த பிப்., 28ம் தேதி இரவு 1.30 மணிக்கு கண்டமங்கலம் அடுத்த பெரிய அம்மன் குப்பம் கிராமத்தை சேர்ந்த வள்ளுவன்(57) என்பவரின் வீட்டின் பின் பக்க கதவை உடைத்து பிரோவிலிருந்த 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை திருடி சென்றார். அதனை தொடர்ந்து கடந்த ஏப்., 22ம் தேதி இரவு 11.15 மணிக்கு சித்தலம்படி மெயின் ரோட்டில் உள்ள தனசேகர் என்பவருக்கு சொந்தமான சிமெண்ட் கடை பூட்டை உடைத்து பெட்டியில் இருந்த 33 ஆயிரம் ரூபாய் திருடி சென்றார்.
பின்னர் கடந்த மே 3ம் தேதி இரவு 11 மணிக்கு சின்னபாபு சமுத்திரத்தை சேர்ந்த அரிகரன்(24) என்பவரின் பைக்கை படேசாகிபு கோவில் அருகிலி ருந்து திருடினார். கடந்த மே 9ம் தேதி மாலை 6 மணிக்கு எம்.என்.குப்பம் கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவர் தனது வீட்டு குளியல் அறையில் கழட்டி வைத்திருந்த செயினை திருடி சென்றார். இதன் மதிப்பு 50 ஆயிரம் ரூபாய் ஆகும். பல திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட குணாவை 11ம் தேதி கண்டமங்கலம் போலீசார் சின்னபாபு சமுத்திரத்தில் கைது செய்து விழுப்புரம் மாவட்ட ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட் 2ல் ஆஜர் படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி மனோஜ்குமார் குற்றம் சாட்டப்பட்ட குணாவிற்கு 24 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

