/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பூட்டியிருந்த வீட்டை திறந்து 8 சவரன் நகைகள் கொள்ளை
/
பூட்டியிருந்த வீட்டை திறந்து 8 சவரன் நகைகள் கொள்ளை
பூட்டியிருந்த வீட்டை திறந்து 8 சவரன் நகைகள் கொள்ளை
பூட்டியிருந்த வீட்டை திறந்து 8 சவரன் நகைகள் கொள்ளை
ADDED : மார் 06, 2025 03:26 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் பூட்டியிருந்த வீட்டை திறந்து 8 சவரன் நகைகள் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் அடுத்த வழுதரெட்டி, மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பொன்னுவேல் மகன் ஜேம்ஸ், 26; சென்னை தனியார் விளையாட்டு மையத்தில் துப்பாக்கி சுடும் பயிற்றுனராக உள்ளார்.
இவர், கடந்த 3ம் தேதி வீட்டை பூட்டி, சாவியை அருகே மறைத்து வைத்துவிட்டு, குடும்பத்துடன் அருகே சாலையாம்பாளையம் கிராமத்தில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார்.
நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவுகள் திறக்கப்பட்டு, உள்ளே பீரோவில் இருந்த 8 சவரன் நகைகள் மற்றும் பொருள்கள் கொள்ளை போனது தெரிய வந்தது.
தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் நேரில் சென்று தடயங்களை சேகரித்தனர். மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.