/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இரண்டு வயது சிறுமி தேள் கொட்டியதில் பலி
/
இரண்டு வயது சிறுமி தேள் கொட்டியதில் பலி
ADDED : மே 05, 2024 06:06 AM
விக்கிரவாண்டி : இரண்டு வயது சிறுமி தேள் கொட்டி இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செஞ்சி வட்டம் கோணை அருகே உள்ள நாகம் பூண்டியைச் சேர்ந்த விஜய் என்பவரது மனைவி ஜெயா, 21; கூலித் தொழிலாளி. கணவன் மனைவி இருவரும் தனது பெண் குழந்தை லாவண்யா, 2; வுடன் விக்கிரவாண்டி அடுத்த வெட்டுக்காடு கிராமத்தில் குமார் என்பவர் செங்கல் சூளையில் தங்கி கல் அறுக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து தனது குழந்தையுடன் படுத்து உறங்கினர். இரவு 11 மணி அளவில் லாவண்யாவை தேள் கொட்டியது. இதை அடுத்து சிகிச்சைக்காக அருகே உள்ள ராதாபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.